Toggle Navigation

ஸ்ரீராமானுஜர் 1000-ஆவது அவதார திருநட்சத்திர பெருந்திருவிழா

திருக்கோயில் ஸ்தலவரலாறு :

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நகர் மற்றும் வட்டம்,அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகாரசுவாமிதிருக்கோயிலின் ஸ்தலவரலாறு..

பழங்காலத்தில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் யுவநாச்வன் எனும் சிறந்தஅரசன் இருந்தான். அவனுடையமகன் உலகம் முழுவதையும் ஆண்டமாந்தாதா. அவன் மகன் அம்பரீஷன்.அவன் மகன் யுவநாச்வன் பிள்ளையில்லாமல் புத்ரகாமயாகம் செய்துபிறந்தகுழந்தைக்கு "ஹரிதன்" என பெயரிட்டு,வளர்ந்ததும் காசி ராஜனின் மகளை மணந்து நாட்டை ஆட்சிபுரிந்தான்.

ஹரிதன் ஒருநாள் வேட்டையாடகாட்டையடைந்தான். காட்டில் ஒரு புலியானது ஒரு பசுவை கொல்லும் பொருட்டு பசுவின் மேல் பாய்ந்தது. இரக்கமுற்ற ஹரிதன் அப்புலியை கொல்ல அம்பைவிட்டான். அம்புபட்ட புலி பசுவைக் கொன்று தானும் இறந்தது. தன்னால் பசு இறந்ததால் "கோஹத்திதேஷத்திற்காக" மிகவருந்த, ஓர் அசரீரி,வருந்தவேண்டா,சத்தியவரத ஷேத்திரத்தை அடுத்த அருணாரண்யத்தில் அநந்தசரசின் கரையில் பூதபுரி ஷேத்திரம் உள்ளது.அங்குசென்று அநந்தசரஸில் ஸ்நாநம் செய்ய பாவம் தீரும் நன்மை ஏற்படும் என்றது.

ஸ்ரீராமானுஜர் பெருந்திருவிழா அழைப்பிதழ் 2017

   திருவாதிரை திருநட்சத்திரம் தொடக்கம் - 22.04.2017

   திருவாதிரை திருநட்சத்திரம் முடிவு - 1.05.2017

ஹரிதன் நகரம் வந்து ஆசார்யரானவசிஷ்டரை வணங்கி நடந்ததை கூறி பூதபுரி ஷேத்திரம் எங்குள்ளது என வினவ,வசிஷ்டர் பூதபுரி இருக்குமிடம் அறிவித்து பசுக்கு ஜபிக்கும் மந்திரத்தை உபதேசித்து அனுப்பினார்.ஹரிதன் பூதபுரி எனஅந்நகருக்கு பெயர் ஏற்படகாரணம் வினவ,ஆச்சாரியர்வசிஷ்டர் கூறினார்.

முன்னொருகாலத்தில் ருத்ரன் கைலாயத்தில் நடனம் புரியும்போது அவரது ஆடைகள் களைந்ததும், ஜடைகள் விரிந்ததும் கவனியாமல் ருத்ரதாண்டவம் புரிந்ததை கண்ட ருத்ரனது ஏவலர்களான பூதகனங்கள் சிரிக்க,கோபங்கொண்ட ருத்ரன் கைலாயத்தைவிட்டகல சபிக்க,கலங்கிய பூதகனங்கள் பிரம்மனிடம் முறையிட்டனர். பிரம்மாகுற்றம் தீர்வதற்கு ஏற்ற உபாயம் கூறினார். திருவேங்கடமலைக்கு தெற்கே சத்யவரதஷேத்தரமுள்ளது.அதன் வடகிழக்கே அருணாரண்யம் உள்ளது. அங்கு சென்று ஸ்ரீமந்நாராயணனை நோக்கி கடுந்தவம் புரிந்தால் சாபவிமோஷணம் கிடைக்கும் எனஅருளினார். அதன்படி பூதகனங்கள் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்தனர்.

ஸ்ரீமந்நாரயணன்,ஆதிகேசவபெருமாளாக பூதகனங்களுக்கு காட்சியளித்து, ஸ்ரீஆதிசேஷனால் ஏற்படுத்தப்பட்ட தடாகத்தில் மூழ்கச்செய்து குற்றம் தீர்த்துருத்தனை அடையச்செய்தார். பிறகுபூதகனங்கள் ருத்தரன் அனுமதிபெற்று பகவானைஅங்கேயே ஸாந்நித்யம் செய்யப்ராத்தித்து நகரை நிர்மாணித்தனர். பூதங்களால் இந்நகர்நிர்மாணிக்கப்பட்டதால் பூதபுரி என்றபேர்பெற்றது என வசிஷ்டர் கூறினார். (பிற்காலத்தில் மருவி ஸ்ரீபெரும்புதூர் என வழங்கப்பட்டுவரும் புராதனதிருத்தலமாகும்.)

Srimathe Ramyajamamathru muneendhraya Mahathmane Sriranga vasine bhooyath nithyasri nithya mangalam

ஹரிதன் புலன்களை வென்று, ஹிருதயத்தில் ஸ்ரீமந் நாராயணனை தியானித்து ஆச்சாரியர்வசிஷ்டர் உபதேசித்த மந்திரத்தை ஜபித்துக்கொண்டு நூறு வருடங்கள் கடுந்தவம் புரிந்தான். ஸ்ரீமந் நாராயணன்; ஹரிதனுடையத பசுக்கும் ஸ்தோத்திரத்திற்கும் உகந்து இத்தலத்தில் காட்சியளித்து கோஹத்திதோஷம் நீங்கியதாக அருள்புரிந்தார். பிறகு அழிந்த இந்நகரை பழயபடி நிர்மானித்து திருக்கோயிலில் உற்சவங்கள் நடத்திவரப்பட்டது.

திருப்பாற்கடலில் ஸ்ரீமந்நாரயணனின் படுக்கையான ஸ்ரீஆதிசேஷன், ஸ்ரீராமஅவதாரத்தில் ஸ்ரீராமனின் இளவலாக இலட்சுமனராகவும், ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தில் ஸ்ரீகிருஷ்ணரின் மூத்தவராக ஸ்ரீபலராமனாகவும், இக்கலியுகத்தில் ஸ்ரீராமானுஜராகவும் 11-ம் நூற்றாண்டில் சுமார் 1000 ம் ஆண்டுகளுக்கு முன்பு 1017 ம் ஆண்டு இத்தலமான ஸ்ரீபூதபுரியில் பிங்களவருடத்தில் ஸ்ரீராமானுஐர் அவதரித்த புண்ணிய ஸ்தலமாகும். ஸ்ரீராமானுஜரின் தந்தையார்பெயர் -ஆசூரிகேசவசோமயபஜிலு,தாயார்பெயர் காந்திமதி எனும் பூமிப் பிராட்டியர்ஆவார். ஸ்ரீராமானுஜர் தனது 16-ம் வயதில் தஞ்சமாம்பாள் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஸ்ரீஇளையாழ்வார், ஸ்ரீராமானுஜர். ஸ்ரீஉடையவர், ஸ்ரீஎதிராஜர். ஸ்ரீஎம்பெருமானார். ஸ்ரீபாஷ்யகாரர். ஸ்ரீதிருப்பாவை ஜீயர், ஸ்ரீலஷ்மணமுனி, ஸ்ரீகோவில் அண்ணன், ஸ்ரீகோதாகிருதாளர். ஸ்ரீகிருபாமாந்தபிரசன்னர், ஸ்ரீயதிசார்வபௌமர்என்ற பெயர்கள் உண்டு.

ஆனந்தசரஸ் எனும் திருக்குளம் ஆலயத்தின் மேற்குபகுதியில் உள்ளது. இத்திருக்குளம் அனந்தன் எனும் பாம்பினால் (திருப்பாற்கடலில் ஸ்ரீமந்நாரயணனின் படுக்கையான ஸ்ரீஆதிசேஷன் - கலியுகத்தில் ஸ்ரீராமானுஐர்) உண்டாக்கப்பட்டதால்,ராகு கேது பாம்புஉருவில் உள்ளகிரகங்களால் எற்படும் காளசர்பதோஷம் இந்தகுளத்தில் நீராடினால் நீங்கும் என்பதுசிறப்பாகும்.

மேலும் படிக்க