Toggle Navigation

திருக்கோயில் ஸ்தலவரலாறு :

ஸ்ரீராமானுஜர், ஸ்ரீவிசிஸ்டாத்வைதம் எனும் ஸ்ரீவைஷ்ணவ தத்துவத்தையும் ஓம் நமோநாராயணாயநம எனும் இரகசியமந்திரத்தையும் அகிலமும் அறியசெய்து பல்வேறு சீர்திருத்தங்களை செய்தார். ஸ்ரீராமானுஜரின் சீடர்கள் விருப்பப்படி பின்புள்ளோர்தரிசிக்கும் பொருட்டு ஸ்ரீராமானுஜர் திருவுருவ உற்சவவிக்கிரத்தை வடித்து ஸ்ரீராமனுஜர் முன் சமர்ப்பிக்க அவ்வுற்சவவிக்கிரத்தைதன் இரு கரத்தாலும் ஆரத்தழுவி தனதுசக்தியை அளித்துதானுகந்த திருமேனியாக இத்திருத்தலத்தில் அருள்பாலித்துவருகிறார்.

விஜயநகரசாம்ராஜியத்தின் பேரரசரான ஸ்ரீகிருஷ்ண தேவராயரால் இத்திருக்கோயில்,திருப்பணிகள், செய்யப்பட்டு முழு கட்டமைப்பைபெற்றது. இத்திருக்கோயில் 6.35 ஏக்கர்பரப்பளவிலும்,ஆதிசேஷனால் உருவாக்கப்பட்ட அனந்தசரஸ் எனும் திருக்குளம் 3.00 ஏக்கர்பரப்பளவிலும் அமைந்துள்ளது.

ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கைகுறிப்பு

கலியுகம் 4119 சாலிவாகன,சக 939,பிங்களஆண்டு,சித்திரைமாதம், 13-ம் நாள்,வியாழக்கிழமை,வளர்பிறை,பஞ்சமிதிதி,திருவாதிரை திருநட்சத்திரம்,கடகலக்னத்தில் ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார்.

  1. அவதாரம் : ஸ்ரீபெரும்புதூர் - கி.பி. 04-04-1017
  2. தந்தையார் : ஆசூரிகேசவசோமயாஜி.
  3. தாயார் : காந்திமதியம்மை.
  4. திருப்பெயர் : ஸ்ரீராமானுஜர்.
  5. உபநயனம் : கி.பி. 1026-26
  6. திருமணம் : கி.பி. 1033
  7. துணைவியார் : தஞ்சமாம்பாள்
  8. தந்தையார் மறைவு : கி.பி.1033
  9. காஞ்சிபுரம் வருதல் : கி.பி. 1034
  10. காசியாத்திரை : கி.பி.1035
  11. ஆளவந்தார் சந்திப்பு : கி.பி. 1041 ஆம் ஆண்டு
  12. துறவறம் மேற்கொள்ளல் : கி.பி. 1047. வயது 30
  13. ஸ்ரீரங்கம் அடைதல் :கி.பி. 1048
  14. திருக்கோட்டியூர்நம்பி சந்திப்பு : கி.பி. 1049
  15. ஸ்ரீரங்கம் நிர்வாகம் மேற்கொள்ளுதல் : கி.பி.1050
  16. ஸ்ரீ பாஷ்யம் அருளுதல் : கி.பி. 1051 - 1055
  17. வேங்கடவன் மீண்டும் சங்கு சக்கரம் தரித்தவைபவம் : கி.பி. 1057
  18. ஸ்ரீரங்கம் நிர்வாகசீர்திருத்தம் : கி.பி. 1058 - 1090

ஸ்ரீராமானுஜர் திருமேனிகள் :

  1. 1.தாம் உகந்ததிருமேனி - ஸ்ரீபெரும்புதூர்
  2. 2.தமர்உகந்ததிருமேனி - திருநாராயணபுரம்
  3. 3.தானானதிருமேனி - ஸ்ரீரங்கம்

ஸ்ரீராமானுஜரின் முக்கியசீடர்கள்

  1. 1.ஸ்ரீ கூரத்தாழ்வான்.
  2. 2.ஸ்ரீ முதலியாண்டான்.
  3. 3.ஸ்ரீ எம்பார்.
  4. 4.ஸ்ரீ திருக்குருகை பிரான்பிள்ளை.
  5. 5.ஸ்ரீ அருளாளப்பெருமாள் எம்பெருமானார்
  6. 6.ஸ்ரீ சோமாசியாண்டான்.